மேலும் செய்திகள்
ரேஷன் கட்டடம் திறப்பு விழாவிற்காக காத்திருப்பு
04-Aug-2025
பெரியபட்டினம் : பெரியபட்டினம் அருகே களிமண்குண்டு கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் அதிகமான அளவு எழுத்துப் பிழைகளுடன் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். சமீபத்தில் களிமண்குண்டில் புதிய ரேஷன் கடை கட்டடம் திறக்கப்பட்டது. அதனருகே உள்ள பழைய ரேஷன் கடை கட்டடத்தில் புகார் தெரிவிக்க வேண்டிய அலுவலர்களின் தொலைபேசி எண்கள் வரையப்பட்டிருந்தது. அவற்றில் குறிப்பிடப்பட்ட பெருவாரியான எழுத்துக்கள் அனைத்தும் தவறாக உள்ளதால் அதனை படிக்கக்கூடிய பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர். எனவே களிமண்குண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் இயக்கப்படும் ரேஷன் கடையில் முறையாக தகவல்களை எழுத்துப்பிழையின்றி வரைந்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
04-Aug-2025