செஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ராமநாதபுரம்: மண்டபம் ஒன்றியம் பனைக்குளத்தில் பகுர்தீன் தொடக்கப்பள்ளியில் ஒன்றிய செஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. கல்வி வளர்ச்சிநாளை முன்னிட்டு, பனைக்குளம் பகுர்தீன் தொடக்கப்பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி அளவிலான செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு விழாவும் நடந்தது.தலைமையாசிரியர் முத்துமாரி, ஆசிரியர்கள், பள்ளியின் மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒன்றிய அளவில் நடந்த செஸ் போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்ற அர்ஷாக் முகமது, அப்துல்ரகுமான், பர்ஷீன் நுார்பாயிஜா ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர். இடை நிலை ஆசிரியரும் சதுரங்க பயிற்சியாளரும் மணிகண்டன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ஹாஜாமைதீன் நன்றி கூறினார்.