உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மத்திய அரசை கண்டித்து பாம்பனில் காங்., ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து பாம்பனில் காங்., ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் மத்திய அரசு, இலங்கை அரசை கண்டித்து மீனவர் காங்., சார்பில் காங்., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கடந்த ஒரு மாதத்தில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் 88 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மீனவர்களின் வாழ்வாதாரமான 150க்கும் மேற்பட்ட படகுகளைஇலங்கை அரசு விடுவிக்காமல் உள்ளது.இதனால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். தமிழக மீனவர்களை தாக்கி கைது செய்யும் இலங்கை அரசையும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்காமல் அலட்சியமாக உள்ள மத்திய அரசையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.அகில இந்திய மீனவர் காங்., தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமை வகித்தார். ராமேஸ்வரம் நகர் காங்., தலைவர் ராஜீவ்காந்தி, ராமநாதபுரம் மாவட்ட காங்., செயலாளர் பாபாசெந்தில், பாம்பன் ஊராட்சி முன்னாள் தலைவர் பேட்ரிக், மீனவர்சங்க தலைவர்கள் சேசுராஜா, சகாயம், எமிரேட், மாவட்ட காங்., முன்னாள் தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ராஜாராம்பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ