உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குடிநீர் குழாய்களில் தொடர் உடைப்பு

குடிநீர் குழாய்களில் தொடர் உடைப்பு

பரமக்குடி: பரமக்குடி அருகே ராமநாதபுரம் ரோட்டோரம் குடிநீர் குழாய்களில் தொடர்ந்து உடைப்பு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ரோட்டோரங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் உட்பட ஒன்றிய பகுதிகளுக்கான குழாய்களும் பதிக்கப்படுகிறது.இந்நிலையில் பரமக்குடி வைகை ஆறு சர்வீஸ் ரோடு பகுதியில் இருந்து வலது பிரதான கால்வாய் செல்லும் ராமநாதபுரம் ரோட்டோரம் இரு புறங்களிலும் தொடர்ந்து உடைப்பு ஏற்படுகிறது. இப்பகுதியில் நகராட்சி காவிரி குடிநீர் மற்றும் கிராமப்புறங்களுக்கான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு முறையும் இந்த குழாய்களில் உடைப்பு ஏற்படும் போது எந்த திட்டக் குழாய்கள் என கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. இச்சூழலில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சில நாட்கள் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.மேலும் மதுரை, ராமேஸ்வரம் பகுதிகளுக்கு அதிகமான வாகன போக்குவரத்து உள்ள நிலையில் ரோட்டோரம் செல்லும் வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. ஆகவே பழைய குடிநீர் குழாய்களை அப்புறப்படுத்தி புதிதாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ