உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற கவுன்சிலர் கோரிக்கை

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற கவுன்சிலர் கோரிக்கை

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கவுன்சிலர் அர்ஜுனன் கோரிக்கை விடுத்தார்.முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றிய துணைத்தலைவர் கண்ணகி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., ஜானகி முன்னிலை வகித்தார். பல்வேறு தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. விவாதங்கள் வருமாறு:கலைச்செல்வி: வெண்ணீர்வாய்க்கால் காலனியில் பேவர் பிளாக் சாலை அமைக்கவும், கருங்காலகுறிச்சி கிராமத்தில் போர்வெல் அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும். வெங்கலக்குறிச்சி கிராமத்தில் ரேஷன் கடை, ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.அர்ஜுனன்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைய இருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்த ஆண்டு பருவமழை காலத்தில் பெய்த மழையால் மிளகாய், நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகிது. எனவே வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியில் இருந்தும் புத்தக வாசிப்பு திறனை அதிகரிக்க புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இன்னும் சில மாதங்களில் பதவிக்காலம் முடிய உள்ளதால் கிராமங்களில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றார்.மேலும் கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலாளர் சிவகாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை