மேலும் செய்திகள்
கழிவுநீர் வாய்க்கால் சீரமைக்க கோரிக்கை
18-Oct-2024
ஆர்.எஸ்.மங்கலம் : ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் செக்கடி - பெருமாள்மடை ரோட்டில் மாட்டு தலையை வெட்டி நடுரோட்டில் வைத்துச் சென்றதால் பதட்டம் ஏற்பட்டது.ஆர்.எஸ்.மங்கலம் டவுன் செக்கடி தெருவில் இருந்து பெருமாள்மடை செல்லும் ரோட்டில், முன்பு குப்பை கிடங்கு இருந்த பகுதியில் மாட்டின் தலையை சிலர் நடு ரோட்டில் வைத்துச் சென்றுள்ளனர். நேற்று காலை அவ்வழியாக சென்றவர்களும், வாகன ஓட்டிகளும் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த மாட்டின் தலையை பார்த்து அதிர்சியடைந்தனர்.போலீசார் கூறுகையில், மாட்டுக்கறி வியாபாரம் செய்வோர் ரோட்டில் விட்டுச் சென்றனரா என விசாரித்து வருகிறோம் என்றனர்.
18-Oct-2024