உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கூட்டுறவு சங்கத்தில் வெள்ளை அடங்கலுக்கும் பயிர்க் கடன்

கூட்டுறவு சங்கத்தில் வெள்ளை அடங்கலுக்கும் பயிர்க் கடன்

திருவாடானை : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கூட்டுறவு சங்கங்களில் வெள்ளை அடங்கலுக்கும் பயிர்க் கடன் வழங்கஅதிகாரிகள் உத்தரவிட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் பெறும் விவசாயிகள் உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் வட்டி இல்லாத பயிர்க் கடன் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. திருவாடானை, ஆர்எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள 33 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க் கடன் வழங்க 2023-24ம் ஆண்டிற்கு ரூ.150 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஜன.31 வரை பயிர்க்கடன் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள் அருகில் உள்ள கூட்டுறவு சங்கங்களை அணுகி பட்டா, சிட்டா நகல், அடங்கல், கூட்டுறவு வங்கி கணக்கு எண், ஆதார் நகல், இரண்டு போட்டோக்களை கொடுத்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. மூவிதழ் அடங்கலுக்கு மட்டுமே கடன் வழங்கபடுகிறது. சாதாரண அடங்கலுக்கு (வெள்ளை) கடன் வழங்காததால் விவசாயிகள் தவித்தனர். இது குறித்து நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் பேனர் செய்தியாக வெளியானது. இதன் எதிரொலியாக வெள்ளை அடங்கலுக்கும் பயிர்க் கடன் வழங்கலாம் என கூட்டுறவு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மனோகரன் கூறுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் பயிர்க்கடன் பெற மூவிதழ் அடங்கல் வழங்க முடியாதவர்கள், வெள்ளை அடங்கல் வழங்கி பயிர்க்கடன் பெற்றுக் கொள்ளலாம். இது குறித்து சங்க செயலாட்சியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்