மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
16 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
16 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
16 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
16 hour(s) ago
ராமநாதபுரம் : தி.மு.க., அரசின் அலட்சியம் காரணமாக மழை நீர் வயல்களில் புகுந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்து விட்டதாக பா.ஜ., விவசாய அணி சார்பில் குற்றம் சாட்டினர்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் பா.ஜ., விவசாய அணியினர் பங்கேற்றனர். இயற்கை விவசாயியான பா.ஜ., மாவட்ட தலைவர் தரணி முருகேசன் பேசுகையில், வைகை அணை நீர், வெள்ள நீரை முழுமையாக சேமிக்க வழியின்றி வரத்து வாய்க்கால்கள், குளம், ஊருணிகளில் ஆக்கிரமிப்பு, பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் மழைநீர் வயல்களில் புகுந்து மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளது. கையால் ஆகாத தி.மு.க., அரகை கண்டிக்கிறோம் என கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்தனர்.பா.ஜ., மாவட்ட தலைவர் தரணிமுருகேசன் கூறுகையில், பிரதமர் மோடியின் நடவடிக்கையால் மேகமலை சரணாலயம் உருவாக்கப்பட்டு வனப்பகுதி அதிகரித்து இவ்வாண்டு மழை நன்றாக பெய்துள்ளது. மாவட்டத்தில் வடிகால் வசதி, வாய்க்கால் துார் வாரப்படால் மழைநீர் வீணாகியுள்ளது. புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்ட குண்டு மிளகாய் 2020-21ல் மழையால் பாதிக்கப்பட்டது அதற்குரிய காப்பீட்டு நிதியாக மத்திய அரசின் ரூ.6கோடி நிதி வந்தும், மாநில அரசு பங்களிப்பு ரூ.2.5கோடி வரவில்லை. 16,500 எக்டேரில் பயிரிட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை டம்பி அரசு ஆள்கிறது. பெயரளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. குறைகள் தீரும் என ரூ.200, 300 செலவழித்து கூட்டத்திற்கு வந்தும் பலனில்லை என்றார்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago