உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையால் நீரில் மூழ்கிய பயிர்கள்

சிக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழையால் நீரில் மூழ்கிய பயிர்கள்

சிக்கல்: சிக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் நெல் விதைத்த வயல்கள் மூழ்கியுள்ளது. கடந்த மூன்று நாட் களாக சிக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் மழைப் பொழிவு அதிகம் ஏற்பட்டுள்ளது. இதனால் டிராக்டரில் உழவு செய்து விதை நெல் துாவிய இடத்தில் முளைப்புத்திறன் வரும் நிலையில் அவற்றை மூடிய நிலையில் அதிகளவு மழைநீர் தேங்கி யுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் காலை நேரத்தில் வரப்புகளில் தேங்கும் நீரை அப்புறப்படுத்தவும், அவற்றை மோட்டார் வைத்து உறிஞ்சி கண்மாயில் விடும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வரு கின்றனர். தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்குவது தொடர்ச்சியாக இருந்தால் நெல் விதைகள் அழுகும் நிலை ஏற்படும். இதனால் மீண்டும் நெல் விதைப்பு செய்ய நேரிடும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேடான பகுதிகளில் தண்ணீர் வழிந்தோடி நெற்பயிர் வளர்ச்சிக்கு தேவையான மழையாக உள்ளது. இந்நிலையில் கடலாடி சுற்றுவட்டார பகுதிகளில் டிராக்டர்களில் நிலங்களில் உழவு செய்து விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி