உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொடரும் சூறாவளி: ராமேஸ்வரத்தில் மூன்றாவது நாளாக மீனவர்களுக்கு தடை

தொடரும் சூறாவளி: ராமேஸ்வரத்தில் மூன்றாவது நாளாக மீனவர்களுக்கு தடை

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து சூறாவளி வீசுவதால் மூன்றாம் நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் மீனவர்கள் டிச.,16 முதல் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். இதனால் 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர். இந்நிலையில் 3ம் நாளான நேற்று ராமேஸ்வரம் பகுதியில் மேக மூட்டத்துடன் சூறைக் காற்று வீசியது. இதனால் கடலில் கொந்தளிப்பும் அதிக நீரோட்டமும் இருந்தது. இச்சூழலில் நேற்றும் தடை நீடித்ததால் மீனவர்கள் கரையில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை