உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நுாற்பாலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நுாற்பாலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கமுதி : கமுதி அருகே அச்சங்குளம் கூட்டுறவு நுாற்பாலையில் ஊதியம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கமுதி அருகே அச்சங்குளம் கிராமத்தில் கூட்டுறவு நுாற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஜூன் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது நிதி பற்றாக்குறை காரணம் என்று கூறியுள்ளனர்.இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் எப்படி ஊதியம் வழங்கினீர்கள். எங்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு மட்டும் எப்படி நிதி பற்றாக்குறை ஏற்பட்டது எனக் கூறி நுாற்பாலையில் நிரந்தர ஒப்பந்த தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின் நுாற்பாலை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை ஊதியம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி