உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கட்டுமானப் பொருள் ஏற்றும் வாகனங்களால் அவதி

கட்டுமானப் பொருள் ஏற்றும் வாகனங்களால் அவதி

ஆர்.எஸ்.மங்கலம் : திறந்த நிலையில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.ஆர்.எஸ்.மங்கலம், சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான தனியார் கட்டடங்கள் மற்றும் அரசு கட்டடங்கள், வீடுகள் கட்டுமான பணிகள் நடக்கின்றன. கட்டுமான பணிகளுக்காக வெளி மாவட்டங்களில் இருந்து செங்கற்கள், எம்சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் கொண்டு வரப்படுகின்றன.கட்டுமான பொருட்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களில் திறந்த நிலையில் கொண்டு செல்லப்படுவதால் கட்டுமானப் பொருட்களில் உள்ள துாசு காற்றில் பறப்பதால் பின்னால் வரும் டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி விபத்துக்கள் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.எனவே தார்ப்பாய் கொண்டு மூடாமல் கட்டுமான பொருட்கள் ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை