உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அடந்தனார்கோட்டை ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் சிரமம்

அடந்தனார்கோட்டை ரோடு சேதம்: வாகன ஓட்டிகள் சிரமம்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சேதமடைந்த நிலையில் உள்ள அடந்தனார்கோட்டை ரோட்டை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் ரோடு, மயிலுாருணி விலக்கில் இருந்து அடந்தனார்கோட்டை செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டில் மயிலுாருணி, அடந்தனார்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதி கிராமத்தினர் பயனடைகின்றனர்.இந்நிலையில் அடந்தனார்கோட்டை குடிநீர் ஊருணியை ஒட்டியுள்ள பகுதியில் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. ரோட்டில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி உள்ளதால் பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி