உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடி - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வாறுகால் சேதம்: விபத்து அதிகரிப்பு

சாயல்குடி - துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வாறுகால் சேதம்: விபத்து அதிகரிப்பு

சாயல்குடி பேரூராட்சிக்குட்பட்ட கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை நகரின்மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2023 டிச.,ல் சாயல்குடி நகருக்குள் பெருவெள்ளம் சூழ்ந்ததால் கழிவுநீர் செல்லும் வழி முழுவதும் மழை நீரால் மூழ்கியது. அச்சமயத்தில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் இயந்திரத்தின் மூலமாக வழி ஏற்படுத்தப்பட்டு பெருவாரியான வெள்ள நீர் கடத்தப்பட்டது. இந்நிலையில் கடத்தப்பட்ட வாறுகாலின் பக்கவாட்டுச்சுவர்கள் சேதமடைந்து திறந்த வெளியாக உள்ளது.சாயல்குடி மாதவன் நகரை சேர்ந்த முருகேசன் கூறியதாவது: சாயல்குடி பிரதான சாலையின் இரு புறங்களிலும் திறந்த நிலையில் கழிவுநீர் வாறுகாலில் செல்வதால் சிறியவர்கள்முதல் பெரியவர்கள் வரை வாறுகால் பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைந்துள்ளனர். துர்நாற்றத்தினால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. கனரக வாகனங்கள் உள்ளிட்டவைகள் செல்லும் பொழுது செல்ல வழி இன்றி தவறி டூவீலருடன் விழுந்து விபத்து நடந்தது. எனவே வாய்க்கால்களை சீரமைத்து மூட வேண்டும் என்றார்.சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புதிய தார் சாலை அமைக்கும் சமயத்தில் இருபுறங்களிலும் திறந்த வெளியில் உள்ள வாறுகாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை