உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெரிய கண்மாய் தென் கலுங்கில் ஷட்டர் சேதம்: சீரமைக்க கோரிக்கை

பெரிய கண்மாய் தென் கலுங்கில் ஷட்டர் சேதம்: சீரமைக்க கோரிக்கை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் பெரிய கண்மாய்தென் கலுங்கில் ஷட்டர் சேதமடைந்துள்ளதால்பொதுப்பணித்துறையினர் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.ராமநாதபுரம் பெரிய கண்மாய் காருகுடியில்துவங்கி லாந்தை வரை 12 கி.மீ., நீளத்தில்200 ஏக்கரில் அமைந்துள்ளது. 8.24 சதுர மைல் நீர்பிடிப்பு பகுதியில் 618 மில்லியன் கன அடி நீரை தேக்க முடியும். இந்த கண்மாய் நீரில் 3968. 65 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.தொருவளூர், பாப்பாகுடி, குமரியேந்தல், கவரங்குளம், களத்தாவூர், சூரன்கோட்டை, இடையர்வலசை, கே.கே.நகர், முதுனால், நொச்சிவயல், அச்சுந்தன்வயல், புத்தேந்தல், சாக்காங்குடி, வன்னிவயல், சித்துார், லாந்தை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில்நெல் சாகுபடி நடக்கிறது.தற்போது கண்மாய் துார்ந்து போனதாலும், பெரும்பான்மையானவிவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாறியதாலும் பாசனபரப்புகள் சுருங்கியுள்ளது. இந்நிலையில் கண்மாயைதுார்வாரி பராமரிப்பு பணிகளை செய்யாமல் பொதுப்பணித்துறையினர் செயல்படாமல் முடங்கிஉள்ளனர்.கண்மாயின் தென் கலுங்கு பகுதியில் ஷட்டரில் பராமரிப்பு பணிகள் செய்யாததால் ஷட்டர்கள் சேதமடைந்துஉடைந்து விழும் நிலையில் உள்ளது.இதனை சீரமைக்கும் பணியைசெய்யாமல் பொதுப்பணித்துறையினர் அசட்டையாகஉள்ளனர்.பெரும் மழை நேரங்களில் கண்மாய் நிறைந்து தண்ணீர் வெளியேறும் போது ஷட்டர்களை உடைக்கும் நிலை ஏற்படும்.எனவே தென்கலுங்கு பகுதியில் உள்ள ஷட்டர்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ