உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 10 நாளில் சேதமடைந்த சாலை அரசு நிதி ரூ.48 கோடி வீணடிப்பு

10 நாளில் சேதமடைந்த சாலை அரசு நிதி ரூ.48 கோடி வீணடிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில், இடையர் வலசையிலிருந்து தொருவளூர் வரை, 5 கி.மீ., சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, காவனுார், தொருவளூர் பகுதியில் இரு உயர்மட்ட மேம்பாலம், 48 கோடி ரூபாயில் நெடுஞ்சாலைத் துறை வாயிலாக கட்டப்பட்டது.அவசர கதியில் நெடுஞ்சாலைத்துறையினர் பணிகளை மேற்கொண்டதால், காவனுார் மேம்பாலம் பகுதியில் உயர்மட்ட பாலம் அளவிற்கு சாலையை உயர்த்த கிராவல் மண் நிரப்பப்பட்டது.அதை சரியான முறையில் அழுத்தம் கொடுத்து செய்யாததால், அமைக்கப்பட்ட 10 நாட்களிலேயே தார் சாலை அரிப்பால் சேதமடைந்துள்ளது. மேலும், தொடர் மழையாலும் சாலையில் பாலம் பாலமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் சென்றால், சாலை முழுதும் சிதைந்து விடும். இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க முன்வர வேண்டும்.சாலையின் பக்கவாட்டுப் பகுதிகளில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, பிடிமானம் இல்லாமல் அந்தரத்தில் தொங்குவது போல உள்ளது. மழைநீரால் அரிப்பு ஏற்படாதவாறு தடுப்புகளை ஏற்படுத்தியும், சாலைகளை முழுமையாக சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை