உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பனைக்குளம் ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்

பனைக்குளம் ரோட்டில் சுற்றி திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்

ஆர்.எஸ்.மங்கலம்: தேவிபட்டினம் அருகே தேசிய நெடுஞ்சாலை கோப்பேரி மடத்தில் இருந்து சித்தார்கோட்டை, அம்மாரி, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம், நதிப்பாலம், பெருங்குளம் வழியாக ராமநாதபுரம் செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில் 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைகின்றனர். இதனால் இந்த ரோட்டில் பஸ், சரக்கு வாகனங்கள், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இந்நிலையில் விளைநிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இதனால் மேய்ச்சலுக்கு விளைநிலங்கள் அமைந்துஉள்ள பகுதிக்கு செல்ல வழியின்றி கால்நடைகள் ரோட்டோரப்பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டு திரிகின்றன. ரோடுகளில் குறுக்கே செல்லும் கால்நடைகளால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கால்நடைகளின் மீது மோதி விபத்தில் சிக்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ரோட்டில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை