மேலும் செய்திகள்
ஷெஷ்டிகுல்லி கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கிலம்
09-Jul-2025
தொண்டி:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே எம்.ஆர்.பட்டினம் கடற்கரையில் இறந்து அழுகிய நிலையில் கடல் பசு ஒதுங்கியது.மன்னார் வளைகுடா தீவுகளில் கடல் பசு, டால்பின், கடல் அட்டை, கடல் ஆமை உள்ளிட்ட பல வகை அரிய உயிரினங்கள் வாழ்கின்றன. அவை அவ்வப்போது கரை ஒதுங்கும். சமீப நாட்களாக இனப்பெருக்கத்திற்காக வரும் ஆமைகள் மீனவர்கள் வலையில் சிக்குவதும், அவற்றை அவர்கள் மீண்டும் கடலுக்குள் விடுவதும் அடிக்கடி நடக்கிறது.நேற்று காலை எம்.ஆர்.பட்டினம் கடற்கரையில் இறந்து அழுகிய நிலையில் 3 அடி நீளமுள்ள 30 கிலோ கடல் பசு ஒதுங்கியது. அப்பகுதி மீனவர்கள் வனத்துறையினரிடம் தெரிவித்தனர். வனச்சரகர் திவாகர், வனவர் ராமச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் சென்று உடல் பரிசோதனைக்கு பின் கடல் பசுவை புதைத்தனர். படகு மோதியோ அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டோ கடல் பசு இறந்திருக்கலாம் என வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
09-Jul-2025