உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலாடியில் பராமரிப்பின்றி பத்திரப்பதிவு அலுவலகம் அதிகாரிகள் மெத்தனம்

கடலாடியில் பராமரிப்பின்றி பத்திரப்பதிவு அலுவலகம் அதிகாரிகள் மெத்தனம்

கடலாடி : கடலாடியில் அதிகாரிகளின் மெத்தனத்தால் பத்திரப் பதிவு சார்பதிவாளர் அலுவலகம் பராமரிப்பின்றி உள்ளது.இங்குள்ள அரசு மருத்துவமனை அருகே உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் 20 வருவாய் கிராமங்களில் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். 2013ல் கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலக கட்டடம் முறையான பராமரிப்பு இல்லாததால் பொலிவிழந்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீர் பத்திரப்பதிவு அலுவலக வளாகம் முழுவதும் நிரம்பி காணப்படுவது வழக்கம். தேங்கிய நீரை வெளியே அகற்றாததால் கொசு உற்பத்தி மையமாகியது. இதனால் பொதுமக்கள் மற்றும் அலுவலர்களை பகலிலும் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர்.விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது.மாற்றுத்திறனாளிகள் செல்லும் நடைமேடை சேதம் அடைந்துள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்பட்ட பேவர் பிளாக் மீண்டும் பரப்பாமல் குவித்து வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது.அலுவலகம் வரும் பொதுமக்களுக்கு தனியாக கழிப்பறை வசதி இல்லை. எனவே கடலாடி பத்திரப்பதிவுத்துறையினர் அலுவலகத்தை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ