உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொழிலாளர்களுக்கு ஆயுள் சான்று வழங்குவதில் தாமதம் நலவாரிய அதிகாரிகள் அலட்சியம்

தொழிலாளர்களுக்கு ஆயுள் சான்று வழங்குவதில் தாமதம் நலவாரிய அதிகாரிகள் அலட்சியம்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் நல வாரியத்தில் ஆயுள் சான்று வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக காமராஜர் கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழக அரசின் உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் 18 வகையான தொழில்கள் அடங்கியுள்ளது. இதில் கைத்தறி நெசவுத் தொழிலாளர் நல வாரியத்தில் 2024ம் ஆண்டு நவ., மாதம் முதல் புதிதாக பதிவு செய்த உறுப்பினர்களுக்கு 6 மாதமாக உறுப்பினர் அட்டை வழங்கப்படாமல் உள்ளது.இதேபோல் நல வாரியத்தில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஏப்., மாதத்தில் ஆயுள் சான்று வழங்க வேண்டும். ஆனால் அதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது. இதனால் ஓய்வூதியம் சிக்கல் ஏற்படும்.இது குறித்து மாநில நல வாரிய அலுவலக செயலாளர், மாவட்ட கலெக்டர், ராமநாதபுரம் உதவி ஆணையர் உள்ளிட்டோருக்கு கடிதம் மூலம் தெரிவித்தும் எந்த பதிலும் இல்லை. ஆகவே உடனடியாக கோரிக்கைகளை செயல்படுத்த வேண்டும், என ராமநாதபுரம் மாவட்ட காமராஜர் கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்க செயலாளர் குப்புசாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை