உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிராம மாணவர்களின் நலன் கருதி கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

கிராம மாணவர்களின் நலன் கருதி கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே வெங்கலக்குறிச்சி கிராமத்திற்கு மாணவர்களின் நலன் கருதி காலை, மாலை நேரத்தில் கூடுதல் அரசு பஸ் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.முதுகுளத்துார் அருகே வெங்கலக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் கருங்காலக்குறிச்சி, தொட்டிவலசை, வெங்கலக்குறிச்சி கிராமங்களில் இருந்து 140க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 10 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப்பள்ளி 2018ல் நடுநிலைப்பள்ளியில் இருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. முதுகுளத்துாரில் இருந்து வெங்கலக்குறிச்சி வழியாக காலை நேரத்தில் ஒரு சில பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். ஊராட்சி தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:வெங்கலக்குறிச்சி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு சுற்றுப்புற கிராம மாணவர்கள் படிக்கின்றனர். காலை, மாலையில்​பஸ் வசதி​இல்லாததால் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி செல்ல முடியாமல் மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். இதனால் கூடுதல் பணம் செலவழித்து ஆட்டோவில் வரும் அவல நிலை உள்ளது. பொதுமக்கள் தவிக்கின்றனர். எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி காலை, மாலை நேரத்தில் கூடுதல் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை