உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலத்தில் டூவீலர்கள் நிறுத்த எல்லை நிர்ணயம்

ஆர்.எஸ்.மங்கலத்தில் டூவீலர்கள் நிறுத்த எல்லை நிர்ணயம்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதி வர்த்தக நிறுவனங்களின் முன் ரோட்டில் வாகனங்களை நிறுத்தி விட்டு பொருள்கள் வாங்க செல்லும் நிலை இருந்து வந்தது. பயிற்சி ஏ.எஸ்.பி.யாக, பொறுப்பேற்ற தனுஷ் குமார் வர்த்தக கடைகளின் முகப்பில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார். மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் வர்த்தக நிறுவனங்களில் முகப்பு பகுதியில் வாடிக்கையாளர்கள் டூவீலர்களை பார்க்கிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து பரமக்குடி சாலையின் இரு ஓரங்களிலும் தரையில் எல்லை கோடுகளாக கயிறுகளை அமைத்து, அதில் டூ வீலர்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !