மேலும் செய்திகள்
பயணியர் நிழற்குடை சேதம் சீரமைக்க நடவடிக்கை தேவை
17-Nov-2024
முதுகுளத்துார் : முதுகுளத்துார் -பரமக்குடி ரோடு ஆற்றுப்பாலம் அருகே பயணியர் நிழற்குடை இருந்தது. இங்கு செல்வநாயகபுரம், ஆனைசேரி, கீரனுார், நல்லுார் உட்பட அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் நிழற்குடையில் காத்திருந்து பஸ்சில் சென்று வந்தனர்.தற்போது முதுகுளத்துார் -பரமக்குடி ரோட்டில் ஆற்றுப்பாலம் அருகே ரோடு விரிவாக்கம் பணி நடைபெற உள்ளது. இதையடுத்து இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இடையூறாக இருந்த பயணியர் நிழற்குடையும் இடித்து அகற்றப்பட்டது.இதனால் வரும் நாட்களில் மக்கள் வெயில், மழைக்காலங்களில் ரோட்டில் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. எனவே ரோடு விரிவாக்க பணி முடிந்தவுடன் புதிய நிழற்குடை கட்ட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
17-Nov-2024