உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கச்சத்தீவை மீட்டுத்தரக் கோரி ஆர்ப்பாட்டம்: 30 பேர் கைது

கச்சத்தீவை மீட்டுத்தரக் கோரி ஆர்ப்பாட்டம்: 30 பேர் கைது

ராமேஸ்வரம் : கச்சத்தீவை மீட்டுத்தரக் கோரி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காவிபுலிப்படையைச் சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்த நாள் முதல் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை பறி போனது. இலங்கை கடற்படையினர் தாக்குதலுக்கு மீனவர்கள் ஆளாகி வாழ்வாதாரம் இழந்துள்ளனர். பாரம்பரிய சொத்தான கச்சதீவை மீட்க வேண்டும் எனக்கோரி நேற்று தடையை மீறி ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் காவிபுலிப்படை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் போஸ் உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ