மேலும் செய்திகள்
பாதுகாப்பு ஏற்பாடுகள்: எஸ்.பி., ஆய்வு
21-Oct-2024
கமுதி: -ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 117 வது ஜெயந்தி, 62வது குருபூஜை விழா இன்று(அக்.,28ல்) துவங்குகிறது. அக்.,30ல் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழாவில் இன்று காலை யாகசாலை பூஜைகள் தொடங்கி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நாளை (அக்.,29) அரசியல் விழாவாகவும் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் ஜோதி எடுத்தும், பால்குடம், முளைப்பாரி, பொங்கல் வைத்தும், வேல்குத்தி மரியாதை செலுத்த உள்ளனர். அக்.,30ல் அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசியல் கட்சியினர், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் பலர் மரியாதை செலுத்த உள்ளனர்.மாவட்ட நிர்வாகம் சார்பில் பசும்பொன் முழுவதும் குடிநீர், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படைவசதிகள் செய்யப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் பசும்பொன் சென்று வர பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
21-Oct-2024