வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அந்த கோவிலெல்லாம் காலாற நடந்து வந்து கும்பிடுவதற்கு கட்டப் பட்ட கோவில்டா. கர்ப்பகிரகம் வரை கார் ஓட்டிக்கிணும் போய் கும்புடறதுக்கில்லை. நடந்து போங்க.
உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமான உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு பார்க்கிங் வசதி இல்லாததால் ராஜகோபுரம் நுழைவுப்பகுதியை ஆக்கிரமித்து கண்டபடி வாகனங்களை நிறுத்துவதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.உத்தரகோசமங்கை மங்களநாதர், மங்களேஸ்வரி கோயிலில் ஏப்.,4ல் கும்பாபிஷேகம் நடந்த பிறகு வெளி மாநிலங்கள், மாவட்டங்கள் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து யாத்ரீகர்கள், பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். இந்நிலையில் மங்களநாதர் சுவாமி கோயில் ராஜகோபுரம் அருகே உள்ள பேவர் பிளாக் சாலையில் அதிகளவு கார்கள் மற்றும் வேன்கள் நிறுத்தி வைக்கும் இடமாக மாறி வருகிறது. உத்தரகோசமங்கை கிழக்கு ரத வீதி வழியாக முதுகுளத்துார், சாயல்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்கள் சிரமத்துடன் கடந்து செல்கின்றன.பக்தர்கள் கூறியதாவது: உத்தரகோசமங்கை ராஜகோபுரம் அருகே ஏராளமான வாகனங்கள் ஒழுங்கில்லாமல் இஷ்டத்திற்கு நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பிரதான சாலையில் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண கோயிலின் மேற்கு கோபுர வாசல் பகுதியில் உள்ள இடத்தில் கார் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தவும் அல்லது வராகி அம்மன் கோயிலுக்கு செல்லக்கூடிய பகுதியில் திருவிழா காலங்களில் நடைமுறைப்படுத்தக் கூடிய பார்க்கிங் வசதியை முறைப்படுத்தவும் வேண்டும்.கோயில் அருகே இருபுறங்களிலும் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை காட்டிலும் கூடுதலாக கடை விரிப்பதால் இடையூறு ஏற்படுகிறது. எனவே உத்தரகோசமங்கை போலீசார் அவ்விடத்தில் நெரிசலை கட்டுப்படுத்தி முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.--
அந்த கோவிலெல்லாம் காலாற நடந்து வந்து கும்பிடுவதற்கு கட்டப் பட்ட கோவில்டா. கர்ப்பகிரகம் வரை கார் ஓட்டிக்கிணும் போய் கும்புடறதுக்கில்லை. நடந்து போங்க.