உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தர்ம சாஸ்தா --புஷ்கலாதேவி திருக்கல்யாணம்

தர்ம சாஸ்தா --புஷ்கலாதேவி திருக்கல்யாணம்

இன்று மண்டல பூஜைபரமக்குடி: பரமக்குடி ஐயப்பன் கோயிலில் தர்மசாஸ்தா- புஷ்கலா தேவி திருக்கல்யாண வைபவம் நடந்தது.இன்று மண்டல பூஜை நடக்கிறது.பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள கோயிலில் தர்ம சாஸ்தா யோக நிலையிலும், உற்ஸவர் ராஜாங்க திருக்கோலத்திலும் அருள் பாலிக்கிறார். இங்கு கேரளா ஆரியங்காவுக்கு அடுத்தபடியாக ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாண உற்ஸவம் விமரிசையாக நடக்கிறது.டிச.24 இரவு 7:00 மணிக்கு தர்மசாஸ்தா, புஷ்கலா தேவி நிச்சயதார்த்த வைபவம் நிறைவடைந்து அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதன்படி சவுராஷ்டிர குல கன்னியாக உள்ள புஷ்கலா தேவிக்கும், தர்மசாஸ்தாவுக்கும் நேற்று காலை 9:30 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு நிறைவடைந்து திருக்கல்யாணம் உற்ஸவம் நடத்தது.பின்னர் மாலை மாற்றுதல், நலுங்கு சுற்றுதல் உள்ளிட்ட விவாக சடங்குகள் சவுராஷ்டிர குல முறைப்படி நடத்தப்பட்டன. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு சுவாமிகள் திருக்கல்யாண திருக்கோலத்தில் யானை வாகனத்தில் பட்டணப்பிரவேசம் வந்தனர். பக்தர்கள் சரண கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். இன்று மண்டல பூஜையையொட்டி காலை 6:00 மணி முதல் கணபதி ஹோமம், கருப்பணசாமி அபிஷேகம் நடக்கிறது. பின்னர் மாலை 6:00 மணிக்கு ஐயன் சர்வ அலங்காரத்துடன் திருவீதி உலா வருகிறார்.ஏற்பாடுகளை தர்மசாஸ்தா சேவா சங்க நிர்வாகிகள் மற்றும் விழாக் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ