உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பயணியர் நிழற்குடை அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

பயணியர் நிழற்குடை அகற்றம் தினமலர் செய்தி எதிரொலி

முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி விலக்கு ரோட்டில் சேதமடைந்த பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது.முதுகுளத்துார் --கமுதி ரோடு சித்திரங்குடி விலக்கு ரோட்டில் இருந்து 3 கி.மீ., உள்ளது. இங்கு காலை, மாலை நேரத்தில் பள்ளி மாணவர்களின் வசதிக்காக அரசு பஸ் இயக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குபவர்களும், வேலைக்கு செல்பவர்களும் 3 கி.மீ., நடந்து வந்து விலக்கு ரோட்டில் காத்திருந்து செல்கின்றனர்.பயணியர் நிழற்குடை சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சேதமடைந்த பயணியர் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது.செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.மேலும் புதிய பயணியர் நிழற்குடை விரைவில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை