உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.49 லட்சம் முத்ரா கடன் வழங்கல்

பரமக்குடி கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.49 லட்சம் முத்ரா கடன் வழங்கல்

பரமக்குடி, : -ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.49 லட்சம் முத்ரா கடன் வழங்கியதுடன் தொழிலை மேம்படுத்த மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் நெசவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பரமக்குடி, எமனேஸ்வரம் கைத்தறி நெசவாளர்கள் தொழிலை மேம்படுத்தும் வகையில் ரூ.50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை முத்ரா கடன் வழங்கப்படுகிறது.தொடர்ந்து 91 பேருக்கு ரூ.46 லட்சம் முத்ரா திட்டத்திலும், 3 பேருக்கு சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தில் ரூ.3.19 லட்சம் பெற்றுக் கொண்டனர்.நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் முன்னிலை வகித்தார். கைத்தறி உதவி இயக்குனர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். கலெக்டர் பேசியதாவது:நெசவாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகிறது.மத்திய அரசின் முத்ரா கடன் வழங்கும் திட்டம், மாநில அரசின் துணையோடு செயல்படுத்தப்படுகிறது.பரமக்குடி கைத்தறி சேலைகள் பல நாடுகளில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் ஆண்டிற்கு ஒரு கோடிக்கும் மேல் மக்கள் வந்து செல்லும் சுற்றுலா நகரமான ராமேஸ்வரத்தில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய வழிவகை செய்யப்படும்.விருப்பமுள்ள நெசவாளர் சங்கங்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகி தேவையான இட வசதிகளை பெற்று தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றார். கைத்தறி துறை உதவி இயக்குனர் லட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், திட்டக்குழு துணைத் தலைவர் ஜீவரத்தினம், நகராட்சி துணைத் தலைவர் குணசேகரன், பெடரேஷன் சங்க தலைவர் சேஷய்யன், செயலாளர்கள் கோதண்டராமன், ருக்மாங்கதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை