உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காட்சிப்பொருளான மினி டிரான்ஸ்பார்மர்

காட்சிப்பொருளான மினி டிரான்ஸ்பார்மர்

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஊராட்சி பாண்டியன் நகரில் 2000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்கு அதிகளவில் மின்தடை மற்றும் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பொதுமக்கள் கூடுதல் திறன் கொண்ட மினி டிரான்ஸ்பார்மர் நிறுவ கோரிக்கை விடுத்தனர். இதனடிப்படையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மினி டிரான்ஸ்பார்மர் அமைப்பதற்காக கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. தற்போது வரை அமைக்காமல் காட்சி பொருளாக வைத்துள்ளனர். ரெகுநாதபுரத்தை சேர்ந்த பா.ஜ., ஒன்றியத் தலைவர் முனியசாமி கூறியதாவது: கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ரெகுநாதபுரம் ஊராட்சி பாண்டியன் நகரில் மினி டிரான்ஸ்பார்மர் வைப்பதற்கான மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன. அவற்றின் இதுவரை பொருத்தாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இது குறித்து மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை