உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தனுஷ்கோடியில் பயன்பாட்டிற்கு வராத பாலம்: ராட்சத அலைகளால் சேதமடைந்ததால் அதிர்ச்சி

தனுஷ்கோடியில் பயன்பாட்டிற்கு வராத பாலம்: ராட்சத அலைகளால் சேதமடைந்ததால் அதிர்ச்சி

மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி மீன்களை இறக்க வசதியாக ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் தமிழக அரசின் பரிந்துரைப்படி 2019ல் நபார்டு வங்கி நிதியுதவியுடன் கடலோரத்தில் பாலங்கள் அமைக்கப்பட்டது. இதில் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் ரூ.7 கோடியில் பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அப்போது மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பகுதியில் வீசும் ராட்சத அலையால் பாலம் விரைவில் இடிந்து விடும். இதனால் பாலத்தால் எந்த பயனும் இல்லை என மீனவர்கள் வலியுறுத்தினர். இதனை அதிகாரிகள்கண்டு கொள்ளாமல் அவசர கதியில் பாலத்தை கட்டினர். இங்கு எழும் ராட்சத அலையால் பாலம் அருகில் படகை நிறுத்தினால் உடைந்து சுக்கு நுாறாகி விடும் அபாயம் உள்ளது.இதனால் ஒருநாள் கூட மீனவர்கள் பாலத்தை பயன்படுத்தாத நிலையில் சில மாதம் முன்பு பாலத்தின் ஒரு பகுதி இடிந்துள்ளது. ஒரு நாள் கூட மீனவர்களின் பயன்பாட்டிற்கு வராமலே பாலம் உடைந்ததால் அரசு நிதி ரூ.7 கோடி வீணாகிப் போனது. சரியான இடத்தில் பாலம் அமைக்காமல், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை