உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / லாரி மீது கார் மோதல் டாக்டர் பலி

லாரி மீது கார் மோதல் டாக்டர் பலி

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே டயர் வெடித்து லாரியில் கார் மோதிய விபத்தில் காரை ஓட்டிய டாக்டர் உமாகணேஷ் பலியானார்.ராமநாதபுரம் ஆர்.ஆர்.சேதுபதி நகரைச் சேர்ந்த சூரியபிரகாஷ் மகன் உமாகணேஷ் 32. டாக்டரான இவர் இங்கு கிளினிக் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மதுரைக்கு தனது காரில் சென்றவர் இரவு 11:00 மணிக்கு அங்கிருந்து திரும்பினார்.மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரம்அருகே லாந்தை பகுதியில் டயர் வெடித்து ரோட்டோரம் நின்ற டிப்பர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் டாக்டர் உமாகணேஷ் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ