உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவிகளிடம் இரட்டை அர்த்த பேச்சு: ஆசிரியர் இடமாற்றம்

மாணவிகளிடம் இரட்டை அர்த்த பேச்சு: ஆசிரியர் இடமாற்றம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்துடன் ஆபாசமாக பேசியதாக பெற்றோர் புகார் தெரிவித்ததால் ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதாகவும், இரட்டை அர்த்த சொற்களை பயன்படுத்துவதாகவும் தலைமையாசிரியர் சந்தனவேலிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சின்னராஜு பள்ளியில் விசாரணை நடத்தினார். சம்பவம் குறித்து எழுத்துப் பூர்வமாக எழுதி புகார் தர வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.இந்நிலையில் பிரச்னைக்குரிய அந்த ஆசிரியர் வேறொரு பகுதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், பள்ளியில் விசாரணை நடத்தியுள்ளோம். ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை