உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குடிநீர் இணைப்பு: கருமொழி ஊராட்சி மாவட்டத்தில் முதலிடம்

குடிநீர் இணைப்பு: கருமொழி ஊராட்சி மாவட்டத்தில் முதலிடம்

திருவாடானை: வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தில் 100 சதவீதம் வழங்கி ராமநாதபுரம் மாவட்டத்தில் கருமொழி ஊராட்சி முதலிடம் பெற்றுள்ளது.மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகள் தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் நடக்கிறது. கிராமப்புறங்களில் 2024 ம் ஆண்டுக்குள் பாதுகாப்பான மற்றும் போதுமான அளவு வீடுகள் தோறும் குடிநீர் வழங்குவதே இத் திட்டத்தின் நோக்கம்.ராமநாதபுரம் மாவட்டத்தில் இப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் இப்பணிகள் நடந்து வரும் நிலையில் மாவட்ட அளவில் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கருமொழி ஊராட்சியில் இத்திட்டம் 100 சதவீதம் முழுமையடைந்து முதலிடம் பெற்றுள்ளது.திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள் கூறியதாவது:ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீட்டுக்கு வீடு குழாய் வழியே குடிநீர் திட்டத்தில் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் கருமொழி ஊராட்சியில் 100 சதவீதம் பணிகள் முடிந்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளது.இதற்கான அறிவிப்பு அக்.2ல் நடந்த கிராம சபை கூட்டத்தில் அறிவிக்கபட்டு ஊராட்சி தலைவர் முத்துராமலிங்கம், ஊராட்சி செயலர் மீனாட்சிசுந்தரத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மற்ற சில ஊராட்சிகளுக்கு இன்னும் டெண்டர் விடவில்லை. 15 வது நிதிக்குழு சார்பில் குடிநீர் பணிகள் நடக்கிறது.டெண்டர் விட்டவுடன் 100 சதவீதம் இலக்கை நோக்கி அனைத்து ஊராட்சிகளிலும் பணிகள் தொடங்கும். இத்திட்டம் முழுமையடையும் பட்சத்தில் அன்றாட வீட்டு தேவைகளை பூர்த்தி செய்யலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை