மேலும் செய்திகள்
பள்ளியில் நடந்த சட்ட விழிப்புணர்வு முகாம்
08-Nov-2025
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. தாளாளர் ஜஹாங்கீர் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ஜாகிர் உசேன் வரவேற்றார். நீதிபதி பாஸ்கர் பங்கேற்று பேசினார். போதை பழக்கத்தால் வாழ்க்கையில் உடல் அளவில், மனதளவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், சமூகத்தில் போதை பழக்கம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும், பெண்கள், குழந்தைகள், திருநங்கைகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கப்படும் சட்ட உதவிகள் குறித்தும், கட்டணமில்லா இலவச சட்ட உதவி தொலைபேசி எண் 15100 பயன்பாடும் குறித்தும், குழந்தை உரிமைகள் பாதுகாப்பு உதவி எண் 1098 குறித்து விளக்கப்பட்டது. சமூக வலைதளங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல், போக்சோ சட்டம், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து விளக்கினர். வழக்கறிஞர் சிவராமகிருஷ்ணன் உட்பட மாணவர்கள் பலர் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் காமிலா பானு நன்றி கூறினார். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் நுாருல் அமீன் செய்தார்.
08-Nov-2025