குரூப் 1 தேர்வில் வென்று டி.எஸ்.பி.,
திருவாடானை : திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தை சேர்ந்த இளம் பெண் குரூப் 1 தேர்வில் வென்று டி.எஸ்.பி., ஆகியுள்ளார்.ஆதியூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் துரைஅரசன். இவரது மகள் ஐஸ்வர்யா 29. ஐஸ்வர்யாவின் கணவர் மதன்பாண்டி சென்னையில் பொறியாளராக பணிபுரிகிறார். ஒரு மகன் உள்ளார். ஐஸ்வர்யா குரூப் 1 தேர்வில் ஒரே முயற்சியில் வெற்றி பெற்று டி.எஸ்.பி., பணிக்கு தேர்வாகியுள்ளார்.ஐஸ்வர்யா கூறியதாவது: குரூப் 1 தேர்வு எழுத ஆர்வமாக இருந்தேன். சென்னை பயிற்சி மையத்தில் படித்தேன். எனது தாத்தா, மாமா, கணவர் என்னை ஊக்கப்படுத்தினார்கள். போலீஸ் துறையில் டி.எஸ்.பி., யாக தேர்வானது பெருமையாக உள்ளது. தற்போது பயிற்சியில் உள்ளேன். பணி நியமன உத்தரவு வந்தவுடன் பொறுப்பேற்பேன் என்றார். இவருக்கு ஆதியூர் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.