உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குடிநீர் வராமல் புதுக்குடி மக்கள் பாதிப்பு மாசடைந்த  ஊருணி நீரால் அரிப்பு நோய்

குடிநீர் வராமல் புதுக்குடி மக்கள் பாதிப்பு மாசடைந்த  ஊருணி நீரால் அரிப்பு நோய்

ராமநாதபுரம்: பரமக்குடி தாலுகா புதுக்குடி ஊராட்சி வினோபா நகரில் பல மாதங்களாக குடிநீர் வரவில்லை. மாசடைந்த ஊருணி நீரை குடிப்பதால் அரிப்பு நோயால் சிரமப்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.வினோபா நகரைச் சேர்ந்த 50க்கு மேற்பட்ட பெண்கள் காலி குடங்கள், பாட்டில்களில் மாசடைந்த ஊருணி நீருடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலர் மட்டும் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.வினோபா நகர் ரேவதி, செல்வி, சண்முகவள்ளி ஆகியோர் கூறுகையில், குழாய்கள் உள்ளது காவிரி குடிநீர் வரவில்லை. வேறு வழியின்றி துாய்மை இல்லாத ஊருணி நீரை குடிக்க, குளிக்க பயன்படுத்துகிறோம். உடலில் அரிப்பு நோயால் குழந்தைகள், முதியவர்கள் சிரமப்படுகின்றனர். தினந்தோறும் குடிநீர் வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி