உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலாடியில் களைகட்டும் தசரா விழா: தெய்வங்களின் வேடமணிந்த பக்தர்கள்

கடலாடியில் களைகட்டும் தசரா விழா: தெய்வங்களின் வேடமணிந்த பக்தர்கள்

கடலாடி : துாத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழாவை முன்னிட்டு, கடலாடியில் காப்புக்கட்டிய பக்தர்கள் தெய்வங்களின் வேடமணிந்து பூஜை செய்கின்றனர். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா செப்.,23 அன்று காப்பு காப்பு கட்டி கொடியேற்றம் நடந்ததை முன்னிட்டு கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் நேர்த்திக்கடன் பக்தர்கள் இவ்விரதத்தை முறையாக கடைப்பிடித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி உற்ஸவ விழா மற்றும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நேர்த்திக்கடன் பக்தர்கள் கடலாடியில் தசரா குழுக்களாக சுவாமி தரிசனத்திற்கு விரதம் இருந்து வருகின்றனர். கடந்த 48 நாட்களுக்கு முன்பு விரதம் துவக்கிய இவர்கள் குலசேகரப்பட்டினம் சென்று கடலில் நீராடி கரகக்குடம் எடுத்து வந்து கடலாடியில் காப்பு கட்டி விரதம் துவக்கினர். தென்னை ஓலை கொட்டகையில் பெரிய கூடாரம் அமைத்து அவற்றினுள் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் படங்களை வைத்து பூஜை செய்கின்றனர். தினந்தோறும் இரவில் சக்தி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளை செய்து அன்னதானம் வழங்குகின்றனர். காளியம்மன், பத்ரகாளி, மயான காளி போலீஸ், டாக்டர், நரிக்குறவர், பெண் வேடம் உள்ளிட்ட தாங்கள் நேர்த்திக்கடனாக ஏற்றுக்கொண்ட பாத்திரங்களின் அடிப்படையில் வேடம் அணிந்து மேளதாளங்கள் முழங்க நகரில் உலா வந்து காணிக்கை பெற்று பூஜை செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !