எமனேஸ்வரம் வரதராஜபெருமாள் கோயில் கஜேந்திர மோட்ச லீலை
பரமக்குடி : பரமக்குடி எமனேஸ் வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கஜேந்திர மோட்ச விழா நடந்தது. எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. கோயிலில் 3ம் ஆண்டு கஜேந்திர மோட்ச விழா நடந்தது. தொடர்ந்து காலை 8:00 மணிக்கு வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படியில் அமர்ந்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த தீர்த்த தொட்டியில் கஜேந்திரன் என்ற யானைக்கு மோட்சமளிக்கும் லீலை நடந்தது. தீப ஆராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலை பெருமாள் ஆற்றில் இருந்து புறப்பட்டு ரத வீதிகள் சுற்றி கோயிலை அடைந்தார். விழாவில் சபை நிர்வாகிகள், கஜேந்திர மோட்ச விழா குழுவினர், பக்தர்கள் பங்கேற்றனர்.