மேலும் செய்திகள்
பண்ருட்டியில் 2ம் நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்
05-Mar-2025
பரமக்குடி : பரமக்குடி அருகே பார்த்திபனுார் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. பார்த்திபனுார் பஸ் ஸ்டாண்ட் துவங்கி இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளது.தொடர்ந்து பார்த்திபனுார், கமுதி, அருப்புக்கோட்டை மாநில நெடுஞ்சாலையில் கடைகளின் முன்பு மணல் மேடு மற்றும் சிமென்ட் தளம் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பார்த்திபனுார் நெரிசல் குறித்து தொடர்ந்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், தாசில்தார் வரதன் உள்ளிட்டோர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். உடன் மாநில நெடுஞ்சாலை துறை ஆய்வாளர் தன்வந்திரி, துணை தாசில்தார்கள் வேங்கடகிருஷ்ணன், முத்துராமன் இருந்தனர். பார்த்திபனுார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
05-Mar-2025