மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டி
19-Oct-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்துவதற்கான மூன்று நாள் பயிற்சியை முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி துவக்கி வைத்தார். மாவட்டத்தில் 55 அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் பிழையின்றி பேசுவதற்கும், உச்சரிப்பதற்கும் மாவட்ட அளவிலான கருத்தரங்கு ராமநாதபுரம் வட்டார வள மையத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் கணேச பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ரவி முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி 6 வகையான பயிற்சி கட்டங்களை துவக்கி வைத்து, இதனை மாணவர்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். பயிற்சியின் முக்கிய அம்சங்களாக வாசித்தல், எழுதுதல், பேசுதல், தகவல் தொடர்பு போன்ற அடிப்படை திறன்களை மாணவர்களுக்கு பள்ளியில் கற்பிப்பதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஜாலி போனிக்ஸ் நிறுவனம் சார்பில் தீபா ஜோசப் ஆடல் பாடலுடன் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். வட்டார கல்வி அலுவலர் சூசை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஷோபனா, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி பங்கேற்றனர்.
19-Oct-2025