உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சுற்றுச்சூழல் தினம் : ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரை 

சுற்றுச்சூழல் தினம் : ஊராட்சி செயலர்களுக்கு அறிவுரை 

திருவாடானை: திருவாடானை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள் கூறியதாவது:சுற்றுச் சூழல் தினம் இன்று (ஜூன் 5)ல் கொண்டாடப்படுகிறது. கிராம மக்களிடத்தில் சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பணிகள் நடைபெறும். ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து ஊராட்சி செயலர்களுக்கும் கிராமங்களில் குப்பையை சேகரித்து சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்தின் அவசியத்தை அறிவுறுத்தும் வகையில் பல்வேறு பணிகள் நடக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி