உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தேர்தல் தர்கா கமிட்டி செயலாளர் தகவல்

ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தேர்தல் தர்கா கமிட்டி செயலாளர் தகவல்

கீழக்கரை: ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தேர்தல் நடக்க உள்ளதாக தர்கா கமிட்டி செயலாளர் செய்யது சிராஜுதீன் லெவ்வை தெரிவித்தார். அவர் கூறியதாவது:ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. பிரசித்தி பெற்ற தர்காவிற்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான யாத்திரீகர்களும், பொதுமக்களும் வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர்.தர்காவில் 300க்கும் மேற்பட்ட ஹக்தார்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாக தேர்தல் நடப்பது வழக்கம். தற்போதைய நிர்வாக கமிட்டி பதவிக்காலம் மே 23.,ல் நிறைவடைகிறது.அடுத்த தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்நிலையில் உயர்நீதிமன்றம் மதுரை கிளை சார்பில் ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் நிர்வாக சபைக்கான தேர்தலை நடத்த நீதிமன்ற ஆணையராக வழக்கறிஞர் எம். அற்புதராஜ் என்பவரை நியமித்து அதன்படி தேர்தல் நடக்க உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ