| ADDED : ஜன 09, 2024 12:08 AM
ராமநாதபுரம் ; ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்தஅன்பழகன் இலங்கைக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்றவழக்கில் போலீசார் 7 ஆண்டுகளாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யாததால் பதிவுச் சான்றிதழ் இன்றிஅரசுசலுகை கிடைக்காமலும், மகள் தொடர்ந்து கல்லுாரி படிப்பை படிக்கமுடியாமலும் குடுமப்பத்தினர் சிரமப்படுகின்றனர்.மண்டம் அகதிகள் முகாமை சேர்ந்த அன்பழகன் மனைவி சுதா,அவரது மகள் நிஷாந்தினி ஆகியோர் ராமநாதபுரம் கலெக்டர்அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:கடந்த 30 ஆண்டுகளாக அகதிகள் முகாமில்தற்காலிமாகதங்கியுள்ளோம். 2017ல் சட்ட விரோதமாகஇலங்கை செல்ல முயன்றதற்காக தனுஷ்கோடி போலீசார் வழக்கு பதிந்தனர். 7ஆண்டுகளாகியும் இதுவரை போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யாததால் வழக்கு முடிவுக்கு வராமல் உள்ளது. இதனால்உதவித்தொகை, அரசின் சலுகைகளை பெற முடியவில்லை. மகன்அஜந்தனைபடிக்க வைக்க முடியவில்லை. மகள் நிஷாந்தியின்உயர்கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.எனவே வழக்கை முடிவுக்குகொண்டு வரவும், தொடர்ந்து மீள்பதிவு (அகதி) சான்றிதழ் வழங்கவேண்டும்.இதுகுறித்து எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., கலெக்டர்அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தமிழக அரசு உதவவேண்டும் என்றனர்.