நவ.18ல் முன்னாள் ராணுவ வீரர் ஓய்வூதியம் குறை கேட்பு முகாம்
ராமநாதபுரம்: முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளைக் கேட்கும் ஸ்பர்ஷ் தொலை தொடர்பு திட்ட முகாம் நவ., 18 ல் கேணிக்கரை பகுதியில் உள்ள யாபா மஹாலில் காலை 9:30 மணிக்கு நடக்கிறது. ஆதார் கார்டு, பான் கார்டு, மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண், அசல் படை விலகல் சான்று, ஓய்வூதிய ஆணை நகல், அடையாள அட்டை, ஓய்வூதியம் பெறும் வங்கிக் கணக்குப் புத்தகம், புகைப்படம் ஆகிய ஆவணங் களுடன் கலந்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு ராமநாதபுரம் முன்னாள் படைவீரர் உதவி இயக்குநர் நல அலுவலகத்தை 04567--230045 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.