உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயில் பெயரில் போலி வெப்சைட்

ராமேஸ்வரம் கோயில் பெயரில் போலி வெப்சைட்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பெயரில் போலி வெப்சைட் உருவாக்கி பக்தர்களை ஏமாற்றிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸ் எஸ்.பி.,க்கு இணை ஆணையர் செல்லத்துரை புகார் அனுப்பியுள்ளார். இக்கோயிலில் தினமும் ஏராளமான வெளி மாநில பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்கின்றனர். கோயிலில் புனித நீராட ஒரு பக்தருக்கு ரூ.25ம், தரிசனத்திற்கு ரூ.100, 200ம், ருத்ர அபிஷேகத்திற்கு ரூ.3000 கட்டணம் வசூலிக்கின்றனர். இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனம் கோயில் பெயரில் போலி வெப்சைட் உருவாக்கியுள்ளது. இதற்கு அட்மினாக ராமேஸ்வரத்தை சேர்ந்த மகேஸ்வரி பவன் நிர்வாகி ஹரிஷ் இருந்துள்ளார். இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த பக்தர் குடும்பத்தினர் போலி ஏஜென்ட் மூலம் கோயிலில் தரிசனம் செய்யவும், தங்குவதற்கும் ரூ.1.60 லட்சம் செலுத்தி ராமேஸ்வரம் வந்துள்ளார். பின் ராமேஸ்வரத்தை சேர்ந்த மணி, புகழேந்தி ஆகியோர் மூலம் போலி டிக்கெட்டில் கோயிலுக்கு நீராட சென்ற போது கோயில் ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலி வெப்சைட் மூலம் பக்தர்களை ஏமாற்றி வரும் ராமேஸ்வரத்தை சேர்ந்த மூவர் உள்ளிட்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இணை ஆணையர் செல்லதுரை எஸ்.பி., சந்தீஷிடம் ஆன்லைனில் புகார் அனுப்பியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை