மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா விவசாயிகள் ஏமாற்றம்
01-Dec-2024
ஆர்.எஸ்.மங்கலம்: சனவேலி சுற்றுவட்டார பகுதியில் தற்போது நிலவும் குளிர்ந்த சீதோஷன நிலை, காற்றின் காரணமாகவும், நெற்பயிர்கள் சாய்ந்ததால், மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர்கள் தற்போது மகசூல் நிலையை எட்டியுள்ளன. குறிப்பாக சனவேலி, ஆப்பிராய், மேல்பனையூர், குலமாணிக்கம், கண்ணுகுடி, கவ்வூர், ஏ.ஆர்.மங்கலம், கூடலூர், நத்தக்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நெல் மகசூல் நிலையை எட்டியுள்ளன. இந்த நிலையில், தற்போது நிலவும் சீதோஷன நிலையால் வீசும் காற்றின் காரணமாகவும், மகசூல் நிலையை எட்டிய நெல் பயிர்கள் வயல்களில் சாய்ந்து விழுந்து வருகின்றன. இதனால், மகசூல் நிலையில் நெல் பயிர்கள் முழுமையாக மகசூல் அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
01-Dec-2024