மேலும் செய்திகள்
காப்புரிமை குறித்து விழிப்புணர்வு
2 minutes ago
ராமேஸ்வரத்தில் ஆதியோகி சிவன் சிலை ஊர்வலம்
3 minutes ago
பற்றாக்குறைராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையால் கண்மாய், ஊருணிகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நெல்சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதே சமயம் உரமிடுதல், களையெடுத்தல் பணிகளுக்கு போதிய ஆட்கள் கிடைப்பது இல்ல. அப்படியே வந்தாலும் வழக்கமான ரூ.300 ஐ விட அதிகமாக தினக் கூலி ரூ. 400 முதல் 500 வரை கேட்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையால் கண்மாய், ஊருணிகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நெல்சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதே சமயம் உரமிடுதல், களையெடுத்தல் பணிகளுக்கு போதிய ஆட்கள் கிடைப்பது இல்ல. அப்படியே வந்தாலும் வழக்கமான ரூ.300 ஐ விட அதிகமாக தினக் கூலி ரூ. 400 முதல் 500 வரை கேட்பதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மாவட்டத்தில் மானாவாரியாக 3 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடக்கிறது. ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழையை நம்பி அக்.,க்கு முன்னதாகவே வயல்களை தயார் செய்து நெல் விதைக்கின்றனர். நடப்பாண்டில் பரமக்குடி, கமுதி, சிக்கல், முதுளத்துார், நயினார்கோவில், ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், புத்தேந்தல், உத்தரகோசமங்கை, சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நேரடி விதைப்பு பணிகள் முடிவடைந்து நெற்பயிர்கள் பூக்கள் பூத்தும், நெல்மணி காய்த்தும் வருகின்றன. அக்., கடைசியில் துவங்கிய பருவ மழை நன்றாக பெய்து முதல் போக சாகுபடி தொய்வின்றி மேற்கொள்ள வசதியாக கண்மாய், ஊருணிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வளர்ந்து வரும் நெற்பயிர்களுக்கு விவசாயிகள் உரமிடுதல், களை எடுத்தல் உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நுாறுநாள் வேலை, கட்டுமான தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்கள் விவசாய வேலைக்கு வர ஆர்வம் காட்டுவது இல்லை. இதனால் நீர் பாய்ச்சுதல், வரப்பு வெட்டுவதல், களையெடுத்தல், பூச்சி மருந்து அடித்தல், உரமிடுதல் ஆகிய பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகியுள்ளது. அப்படியே வந்தாலும் தினக்கூலியாக ரூ.400 முதல் ரூ.500 வரை கேட்கின்றனர். இதனால் சிறு, குறு விவசாயிகள் கூலிஆட்களை நியமிக்க முடியாமல் அவர்களது குடும்ப உறுப்பினர்களே சாகுபடி பணிகளை செய்வதால் சிரமப்படுகின்றனர். எனவே ஊரகப்பகுதிகளில் நுாறு நாள் வேலைப்பணியாளர்களை வேளாண் சாகுபடி பணிகளில் ஈடுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
2 minutes ago
3 minutes ago