மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
1 minutes ago
சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்
1 minutes ago
ராமேஸ்வரத்தில் ரூ.2.09 கோடி உண்டியல் காணிக்கை
4 minutes ago
கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோரைப்பள்ளம், ராமசாமிபட்டி, நீராவி கரிசல்குளம், கிளாமரம், மேலராமநதி, காவடிப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் எல்லோ எக்ஸ்பிரஸ் எனும் மஞ்சள் நிற செண்டுமல்லி (பந்து பூ) பல ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. வரத்து அதிகரிப்பால் கடந்தாண்டு கிலோ ரூ.100க்கு விற்றது. தற்போது ரூ.50 விலை சரிவால் செடியிலேயே பறிக்காமல் விடப்படும் அவலநிலை உருவாகியுள்ளது.கிளாமரம் சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பந்துபூ விலை சரிவால் செடியிலேயே பறிக்காமல் விடப்படும் அவலநிலை உருவாகியுள்ளது. கமுதி அருகே கோரைப்பள்ளம், ராமசாமிபட்டி, நீராவி கரிசல்குளம், கிளாமரம், மேலராமநதி, காவடிப்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் எல்லோ எக்ஸ்பிரஸ் எனும் மஞ்சள் நிற பந்து பூ 100 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். டிசம்பர், ஜனவரி மாதத்தில் மார்கழி மாத பூஜை, சபரிமலை பக்தர்கள், பொங்கல் கணக்கிட்டு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பூ நன்கு வளர்ந்துள்ளது. சாகுபடி பரப்பளவு, விளைச்சல் அதிகரித்தும் விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து கிளாமரம் சிவா கூறியதாவது, இந்த பூ செண்டுமல்லி, துளுக்க சாமந்தி, பந்து பூ என அழைக்கப்படுகிறது. கமுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அதிகமான பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு முறை நடவு செய்தால் ஐந்து மாதங்களுக்கு அறுவடை செய்யலாம். மாதம் ஒருமுறை அறுவடை செய்யப் படும். கடந்தாண்டு ஒரு கிலோ ரூ.150 இருந்தது. நடப்பாண்டு சாகுபடி அதிகரித்த நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.50 குறைவாக விலை போகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விவசாயத்திற்கு செலவு செய்த பணம் கூட கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதனால் கூலி வேலைக்கு கூட ஆட்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாததால் செடியிலேயே பூவை பறிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. நடப்பாண்டு பந்து பூ பயிரிட்ட விவசாயிகள் விலை குறைவால் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது என்றார்.
1 minutes ago
1 minutes ago
4 minutes ago