மேலும் செய்திகள்
22 பா.ஜ.,வினர் மீது வழக்கு
06-Dec-2025
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை அணை உபரி நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெற்ற ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தேக்கப்படும் முழு கொள்ளளவு நீரான 1205 மில்லியன் கன அடி தண்ணீரால் 12,142 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. இந்நிலையில், பெரிய கண்மாய் பாசனத்தை நம்பி விவசாயிகள் நெல் விவசாயம் செய்த நிலையில் போதிய மழை இல்லாததால் பெரிய கண்மாயின் முழு கொள்ளளவு உயரமான 6.5 அடியில், கடந்த மாதம் வரை இரண்டு அடிக்கும் குறைவான தண்ணீர் மட்டுமே தேங்கி இருந்தது. இதனால், நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் முழுமையான நெல் மகசூல் பெற முடியுமா என்று சூழலில் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசன விவசாய சங்க தலைவர் வன்மீகநாதன் தலைமையில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் வைகை நீரை திறக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் மூன்று மாவட்ட பாசனத்திற்கு வைகை அணையில் நீர் திறக்கப்பட்ட நிலயைில் வைகை உபரி நீர் பெரிய கண்மாய்க்கு கொண்டுவரப்பட்டது. இதனால் பெரிய கண்மாயின் நீர்மட்டம் தற்போது கூடுதலாக ஒரு அடிவரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விவசாய சங்க தலைவர் வன்மீக நாதன் கூறுகையில், தண்ணீர் பற்றாக்குறை உள்ளது குறித்து கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் எடுத்துரைத்த நிலையில், விவசாய சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று பெரிய கண்மாய்க்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு கலெக்டருக்கும், மற்ற துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
06-Dec-2025